fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் அரசு மாதிரி பள்ளியில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்...

கடலூரில் அரசு மாதிரி பள்ளியில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்

கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜேஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவி களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் (ஓய்வு), ஆகியோர் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் தெரிவிக்கையில், ஜேஇஇ போன்ற பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் வழங்கும் வகையில் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் போன்று மாவட்டங்களில், வட்டா ரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தேர்ந்தெ டுக்கப்பட்டு அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டா ரங்களிலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமைத றும் வரவழைக்கப்பட்டு ஜேஇஇ, நீட் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 212 வட்டாரங்களில் 272 பள்ளிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 181 மாண விகளும், 223 மாணவர்களும் என மொத்தம் 404 மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்த்து பாடங்களை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். புரிதலுடன் படித்தால் மட்டுமே இது போன்ற போட்டித் தேர் வுகளுக்கு தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதோடு, தேர்வில் நல்ல மதிப்பெண்களும் பெற முடியும்.

அரசு பள்ளி மாணவர்களை ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களில் பயில்வதற்காகவும், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தந்திடவும் அரசின் மூலம் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தில் ஜேஇஇ தேர்விற்கான உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், கடலூர் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், மேலாளர் மாதிரிப் பள்ளிகள், வெற்றிப் பள்ளிகள் உமா, கடலூர் மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img