fbpx
Homeபிற செய்திகள்ஜப்பானிய உணவகச் சங்கிலி தொடர் ‘வீகன் ராமென்’ அறிமுகம்

ஜப்பானிய உணவகச் சங்கிலி தொடர் ‘வீகன் ராமென்’ அறிமுகம்

சென்னை வடபழனியில் உள்ள ஜப்பானிய உணவகம் குராகு (KUURAKU) கிரீன் பார்க் ஹோட்டலில் முதன்முறையாக ‘உண்மையான வீகன் ராமென்’ -ஐ அறிமுகம் செய்துள்ளது.

சிறந்த ஜப்பானிய சமையல்காரர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட இந்த ரெசிபிகள் உண்மையான வீகன், ராமென் ஆகும். இது ஜப்பானில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட நூடுல்ஸ் தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிறப்பு சமையல் குறிப்புகளுடன் தயாரிக்கப்படுவதால் அசைவ உணவு உண்பவர்கள் கூட இதை சுவைக்க முடியும்.

குராகு நிர்வாக இயக்குநர் சீஜிரோ ஹிரோஹாமா பேசியதாவது: உலகெங் கிலும், ஜப்பானிய உணவு பெரும் புகழ் பெற்றுள்ளது. இத்தாலிய மற்றும் சீன உணவுகளுக்குப் பிறகு ஜப்பானிய உணவு மூன்றாவது மிகவும் பிடித்தமான சர்வதேச உணவாகத் திகழ் வது தெரியவந்துள்ளது.

எங்கள் பிராண்டில் உண்மையான வீகன், ராமென் புத்தாக்கத்தைச் சேர்ப் பது இந்தியாவில் தர்க்கரீதியான விரிவாக்கமாகும். அமெரிக்கா, கனடாவில், வீகன் ராமென் பெரும் புகழ் பெற்று வருகிறது.

KUURAKUவில், ஜப்பானிய உணவு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு அதிக விருப்பத்தை வழங்குவதில்லை என்ற பிம்பத்தை அகற்ற முயற்சிக்கிறோம்.
அதிகப்படியான அசைவ உணவுக்குப் பிறகு, எங்கள் மாறுபட்ட மெனுவிலிருந்து தேர்வு செய்யலாம் என்றார்.

பொதுவாக வீகன் சிறப்பு காய்கறி குழம்பு மற்றும் சோயா பால், மசாலா எண்ணெய் மற்றும் பல்வேறு தாவர அடிப்படையிலான பால் ஆகியவற்றால் ஆனது.

மேலே காய்கறிகள். கிரீமி சூப் காய்கறி சுவை நிறைந்தது. இது வீட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற நூடுல் ஸுடன் சரியாக பொருந்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img