fbpx
Homeபிற செய்திகள்உலக மகளிர் தின கொண்டாட்டம்: கதிர் கல்லூரியில் சாதனை பெண்களுக்கு ‘சிங்கப்பெண்’ விருது

உலக மகளிர் தின கொண்டாட்டம்: கதிர் கல்லூரியில் சாதனை பெண்களுக்கு ‘சிங்கப்பெண்’ விருது

கதிர் கல்வி குழுமத்தின் சார்பாக உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கதிரின் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்காக பல்வேறு திட்டங்களை மிகச் சிறந்த அளவில் கொண்டு வந்து செயலாற்றி வருகிறது. அரசு மையங்களைப் போலவே தனியார் நிறுவனங்களும் பெண் கல்விக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சக்தி மசாலா நிறுவனத்தின் பங்களிப்பு என்பது ஆகச் சிறந்த பங்களிப்பாக பார்க்கப்படுகிறது.

8 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கி சாதனை புரிந்து வரும் சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண்களால் தான் இந்த நாடும், இந்த தேசமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்நிகழ்விற்கு கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர் தலைமையேற்றார். செயலர் லாவண்யா கதிர் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களை கதிர் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் மிதிலேஷ் மற்றும் துணைச் செயலர் விதுபிரதிக்ஷா மிதிலைஷ் ஆகியோர் கௌரவித்தனர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர் களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சாதனை புரிந்த சாதனைப் பெண்களை பேராசிரியர்கள், கதிர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் உதயகுமார் மற்றும் கதிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கிருத்திகா ஞிஞிஹிநிரிசீ பொறுப்பாளர் பானுமதி என பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இச்சிறப்பான நிகழ் வினை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கற்பகம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img