fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (எஸ்.வி.பி. ஐ.எஸ்.டி.எம்) பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் மனவுறுதியை வலி யுறுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை உரையில், இயக்குநர் டாக்டர் பி.அல்லிராணி, பெண்களுக்கு சம வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


‘குயின் பீ பேப்பர் கிராஃப்ட்ஸ் – கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ராதிகா, இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மைகளை உருவாக்கும் தனது ஆர்வத்தை எவ்வாறு ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றினார் என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.


மகளிர் தினம் மற்றும் ஸ்வச்ச்தா பக்வாடா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img