தென்னிந்தியாவின் மிகப்பெரிய வேளாண் தொழில்நுட்ப கண்காட் சிகளில் ஒன்றான அக்ரி இண்டெக்ஸ் 2026-ன் 24வது பதிப்பு, கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. ஜூலை 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் கண்காட்சி, விவசாயம், கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நவீன தொழில்நுட்பங்களை ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள்:
கண்காட்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியா வின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுடன், இத்தாலி, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது அரங்கு களை அமைத்துள்ளன.
மொத்தம் 460க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 600க்கும் மேற் பட்ட அரங்குகள் மூலம் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வேளாண் உபகர ணங்களை காட்சிப்படுத்தி யுள்ளன.
வேளாண் ட்ரோன்கள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், சோலார் உபகரணங்கள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், தேங்காய் பறிக்கும் நவீன உபகரணங் கள், தரமான விதைகள், அதிக மகசூல் தரும் நாற்றுகள், பழ மரக் கன்றுகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்லன.
கால்நடைகள்:
கண்காட்சியின் முக்கிய அம்சமாக பாரம்பரிய மற்றும் வெளிமாநில கால்நடை இனங்களுக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் கிர், சாகிவால், சிவப்பு சிந்தி, தார்பார்கர், ரதி, தியோனி உள்ளிட்ட உயர்தர மாட்டு இனங்களும், சவுத் ஆப்பிரிக்கன் போயர், சிரோகி அஜ்மீர் போன்ற அரிய ஆட்டு இனங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும், ரூ.8,500 மதிப்பிலான போன்சாய் மரங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
புதிய வாய்ப்புகள்:

கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழக துணைவேந்தர் என்.பெலிக்ஸ், காலநிலை மாற் றம், வெப்பநிலை உயர்வு மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற சவால் களை எதிர்கொள்ள புதிய தொழில் நுட்பங்களை விவசாயி கள் பயன்படுத்த வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தினார்.
வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில், முனைவோர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் உற்சாகம்:

இக்கண்காட்சியின் முதல் இரண்டு நாட்களிலேயே பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். புதிய தொழில்நுட்பங்கள், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் முறைகள், அரசு திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்கள் ஒரே இடத்தில் கிடைப்பது பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ரூ.8.5 லட்சத்தில் மரம்:

அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சியில் பொதுமக்களைக் கவரும் வகையில் அழகிற்காக வைக்கப் படும் மரக்கன்றுகள், பல்வேறு விதமான போன்சாய் மரங்கள் (குட்டை மரங்கள்) விற்பனைக்கு வைக்கப்பட் டுள்ளன. குறிப்பாக போன்சாய் மரக்கன்றுகள் ரூ.3,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சிறப்பம்சமாக அடினியம் என்ற குட்டை மரம் வைக்கப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களில் அழகிற்காக வைக்கப்படும் இந்த மரத்தை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வரும் நிலையில், இக்கண்காட்சியில் 20 ஆண்டுகள் பழமையான அடினியம் குட்டை மரம் வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8.5 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூக்களும், பழங்களும்:

கண்காட்சியில் அதிக மகசூல் தரும் பூக்கள், பழ மற்றும் காய்கறி இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “பல ஆண்டுகளாக பூ விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், இங்கு எங்கள் மகசூலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு இன பூ நாற்றுகளைப் பார்வையிட்டோம். தற்போது அவற்றை வாங்கியுள்ளோம். விவசாயப் பரப்பு குறைந்து வரும் நிலையில், மகசூல் அதிகம் தரும் இதுபோன்ற இனங்கள், தேவை மற்றும் உற்பத்தி இடையேயான இடைவெளியைக் குறைக்கும்“ என்ற னர்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெ றும் இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்க ளுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடையாள அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஐந்து நாள் கண்காட்சியை சுமார் 1.5 லட்சம் விவசாயிகள் மற்றும் பார்வையாளர்கள் பார்வையி டுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



