தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பான தேர்தல் பணிகள் சுமூகமாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி தான்வி சுந்த்ரியல், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி எஸ். ஹரீஷ், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி சுஹாஸ், காவல் பார்வையாளர் லதா மனோஜ் மற்றும் செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி கஜேந்திர சிங், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி வைபவ் மாதவ் ராவ், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி அஜித் டான் ஆகியோர் தலைமையில், மாவட்ட தேர் தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில், தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் ஆகியோர், 108 உதகமண்டமலம், 109 கூடலூர் மற்றும் 110 குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள், வாக்குசாவடி மையங்களின் எண்ணிக்கை, வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், தேர்தல் பறக்கும் படை குழுவினர்கள், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்கள் வாகன சோதனை செய்யும் விவரங்கள், கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும். ஊடக கண்காணிப்பு மையம், சமூக ஊடகங்கள், சி விஜில் மற்றும் பதற்றமான வாக்குசாவடிகளில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்கள்.

இக்கூட்டத்தில், பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் ஆகியோர் தெரிவித்ததாவது:
அனைத்து தேர்தல்நடத்தும் அலுவலர்களும், தங்களது சட்ட மன்ற தொகுதியிலுள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களை ஆய்வு செய்யவேண்டும். சி விஜில் செயலி தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேவை யான விளம்பர பணிகளை மேற் கொள்ள வேண்டுமெனவும், கடந்த தேர்தலின் போது வாக்கு கள் குறைவாக பதிவான வாக்கு சாவடி மையங்களின் அருகில் தேவையான விழிப்பணர்வு பணிகளை மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் சின்னம் பொருத்தும் பணிகளில், அனைத்து தேர்தல் நடத்தும் அலு வலர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டுமெனவும், தேர்தல் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர்கள் இரவு நேரங்களில் மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் வாகன சோதனை பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

பின்னர், பொது பார்வையா ளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையா ளர்கள் ஆகியோர், கட்டுப் பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும் ஊடக கண்காணிப்பு மையம், சமூக ஊடகங்கள், சி விஜில், தேர்தல் பறக்கும் படை குழுவி னர்களின் செயல்பாடுகள், தேர்தல் நிலையான கண்கா ணிப்பு குழுவினர்கள் செயல்பாடுகளை யும், தேர்தல் நடத்தை விதிமீறல் கள் தொடர்பாக இலவச தொலைபேசி எண் -1950 என்ற எண்ணில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்ட்ட நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் / கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர் / குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் டினு அரவிந்த் (உதகை), குணசேகரன் (கூடலூர்) மற்றும் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



