fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரி ஆய்வகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

கேபிஆர் கல்லூரி ஆய்வகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

கோவை அரசூரில் உள்ள கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திர மின்னணுவியல் துறையில் உள்ள அதிநவீன ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்கள் சிறப்பு ஆய்வகத்திற்கு இங்கிலாந்திலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் தி மோட்டார் இண்டஸ்ட்ரியின் சர்வதேச மையம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அங்கீகாரத்தை பெற்ற ஆய்வகம் என்ற பெருமையையும் இந்த சிறப்பு ஆய்வகம் பெற்றுள்ளது.

ரூ 3.7 கோடியில் ஆராய்ச்சி பணிகள் செய்வதற்கு ஏதுவாக எட்டி கரண்ட் டைனமோ மீட்டர் பொருத்தப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஹைப்ரிட் எஞ்சின் டெஸ்ட் ரிக், ஹைபிரிட் மற்றும் மின்சார வாகன உபகரணங்கள் மற்றும் பணிநிலையங்கள், உரிமம் பெற்ற மென்பொருள், மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் ‘ஆடி க்யூ5’ வாகனத்தின் குறுக்கு வெட்டு அமைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இந்தச் சிறப்பு ஆய்வகம் கடந்த மே 20ல் மாணவர் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img