fbpx
Homeபிற செய்திகள்பேரூர் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு: மூதாட்டிக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

பேரூர் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு: மூதாட்டிக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பேரூர் தாலுகா அலுவலக இ-சேவை மற்றும் ஆதார் மையங்களை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, “மறுமணம் செய்யவில்லை” என்ற சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்த மூதாட்டி கௌசல்யாவின் மனுவை உடனடியாக பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, சான்றிதழை நேரடியாக வழங்கினார்.

தொடர்ந்து, ரூ.54.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகள், வெடிகாரன் குட்டை தூர்வாரும் பணி, நியாய விலைக்கடை, அரசு பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகள், மாதம்பட்டி பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரும் பணி, தடுப்பணை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img