fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான தானியங்கி ரோபோ: நாமக்கல் எம்.எம் மருத்துவமனையில் அறிமுகம்

இந்தியாவின் முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான தானியங்கி ரோபோ: நாமக்கல் எம்.எம் மருத்துவமனையில் அறிமுகம்

நாமக்கல் எம்.எம் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் தானியங்கி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான ரோபோ மிஸ்ஸோ அறிமுக விழா நாமக்கல் இந்திய மருத்துவர் சங்க வளாகத்தில் (நிமா அரங்கம்) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எம் மருத்துவமனை குழுமத்தின் சேர்மனும் தலைமை மருத்துவருமான டாக்டர் எம். சிவக்குமார் தலைமை தாங்கினார்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி, ‘பிளஸ் மேக்ஸ்’ குழுமத்தின் மேனேஜிங் டைரக்டரும் கொங்கு மாமணி ‘டத்தோ’ பிரகதீஷ்குமார், தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் பெடரேஷன் துணைத் தலைவரும் தமிழ்நாடு முட்டை உற்பத்தி சங்கத்தின் தலைவருமான சுப்பி ரமணியம், விநாயகா மிஷன் மருத்துவமனையின் ஆர்த்தோ பெட்டிக் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும் மருத்துவ நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே. மீனாட்சி சுந்தரம், சேலம் மதர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரவிக்குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்தியாவின் முதல் தானியங்கி ரோபோடிக் மூட்டு மாற்று இயந்திரத்தை (மிஸ்ஸோ) அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

பிளஸ் மேக்ஸ் மேனேஜிங் டைரக்டர் பிரகதீஷ்குமார் பேசும்போது எம்.எம் மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதில் சிறப்பாக செய்து வருகிறது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் அளித்து வரும் பங்க ளிப்பு மிகச் சிறப்பானது. இந்த மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக ரோபோ மிஸ்ஸோவை இங்கு அறிமு கப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த மருத்துவ சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து விநாயகா மிஷன் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் பேசும்போது இந்திய தொழில்நுட்பத்தில் (Make in India) உருவாக்கப்பட்ட ரோபோ ‘மிஸ்ஸோ’ என்பது பெருமைக்குரியது. இந்தியா உலக அளவில் பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மூட்டு மாற்று தானியங்கி ரோபோ மூட்டு மாற்று சிகிச்சைக்கு மிகத் துல்லியமான செயல்பாட்டுடன் விளங்கி மருத்துவ சேவையை செய்கிறது.

இந்த ‘மிஸ்ஸோ’வை இங்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியான ஏற்பாடுகளை மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img