சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2.35 கோடி செலவில் தங்க திருவாட்சிகளை புவனகிரியைச் சேர்ந்த குடும்பத்தினர் திங்கள்கிழமை காணிக்கையாக செலுத்தினார்.
கடலூர் மாவட்டம்,புவனகிரியைச் சேர்ந்தச் சுலோசனா கோவிந்தசாமி குடும்பத்தினரால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2.35 கோடி மதிப்பிலான சுமார் 4 கிலோ 500 கிராம் தங்கம்,ஒரு கிலோ 200 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட திருவாட்சிகளை கட்டளை தீட்சிதர் டி.சுப்ரமணிய தீட்சிதர் மூலம் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு திங்கள்கிழமை சுவாமி, அம்பாளுக்கு சாற்றப்பட்டது.



