அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, இந்தியத் தத்துவ காங்கிரஸ் மற்றும் இந்தியத் தத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து “இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மை” எனும் பொருண்மையில் டிச.18, 21 தேதிகளில் 98 – 99ஆவது மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டில் 400க்கும் மேற்பட்டோர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், தென் கொரியா நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இம்மாநாட்டின் துவக்க விழா அண்ணாமலைப் பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் டிச.18ஆம் தேதி காலை நடை பெற்றது. துவக்க விழாவை தொடர்ந்து 5 இணையான அமர்வுகள் பல்கலைக்கழக டெக் பார்க்கில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் 252 ஆய்வுக் கட்டுரைகள் 5 பொருண்மைகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டின் முதல் 2 நாட் கள் மாலையில் இந்தியப் பண்பாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் ‘பண்பாட்டு நிகழ்ச்சிகள்’ நடத்தப்பட்டது.
13 அறக்கட்டளை சொற்பொ ழிவுகள் மற்றும் 12 சிந் தனையரங்கு சொற் பொழிவுகள் நடத்தப்பட் டன. இம்மாநாட்டின் நிறைவு விழா டிச.21ஆம் தேதி மாலை டெக் பார்க் கில் உள்ள ஹைடெக் அரங்கில் நடைபெற்றது.
திண்டுக்கல் காந் திகிராம கிராமிய பல்கலைக் கழகத் தின் துணைவேந்தர் என்.பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைவுரையாற்றி பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய தத்துவ காங்கிரசின் தலைவர் பேராசிரியர் எஸ்.கே.சிங் தலைமை உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வி.சுரேஷ் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டிற்காக அயராது பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் தத்துவத் துறை பேராசிரியர் ச.தணிகைவேலன் வரவேற்புரை ஆற்றினார், மு.பரணி மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார், மாநாட்டு அமைப்பு செயலாளர் ஜெ. திருமால் நன்றி உரையாற்றினார்.
இம் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அமைப்பு குழுவின் செயலாளர் ஜெ.திருமால் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மு.பரணி, ச.தணிகை வேலன், க.ரவீந்திரன்,சி.நீலாதேவி ஆகியோர் செய்தனர்.