fbpx
Homeபிற செய்திகள்இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிர்வாக இயக்குநருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிர்வாக இயக்குநருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சென்னையில் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 22வது பட்டமளிப்பு விழாவில் இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (IIL) நிர்வாக இயக்குநர் டாக்டர். கே.ஆனந்த் குமாருக்கு “அறிவியல் மருத்துவர்” எனும் விருது வழங்கப்பட்டது.

டாக்டர். குமாரின் தொலைநோக்கு தலைமையானது மனித மற்றும் விலங்குகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. இந்த முக்கியமான துறையில் நமது நாட்டின் தன்னிறைவை கணிசமாக மேம்படுத்தி உலகளாவிய வாழ்வியல் சார்ந்த அறிவியல் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரது தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் நம் நாட்டிற்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையை உறுதி செய்துள்ளன.

நாட்டில் கோவிட்19 தடுப்பூசி திறனை அதிகரிக்க, இந்த சாதனை குறுகிய நேரத்தில் 20 மில்லியன் டோஸ்களை தயாரித்து வழங்கி உள்ளனர். இந்த உயிர் காக்கும் முயற்சி நமது இந்திய அரசால் பாராட்டப்பட்டது. இப்படி மருத்துவத்துறையில் சாதனை புரிந்த அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img