fbpx
Homeபிற செய்திகள்கோவை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவை சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7வது அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

விவசாயம், பொறியியல், இயந்திரவியல், மண்ணியல், கட்டிட தொழில்நுட்பம், மருத்துவத்துறை, உடல்நலம், தடையவியல், ரோபோடிக்ஸ் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த 40 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி முதல்வர் மெர்சி விக்டர், தாளாளர் விக்டர் சகாயராஜ், செயலாளர் விவின் ஆண்ட்ரூஸ், துணை செயலாளர் ஆலியா ஆண்ட்ரூஸ், ஒருங்கிணைப்பாளர் வினி ஜோனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வரவேற்றனர். சௌரிபாளையம் பங்குத்தந்தை மரிய ஜோசப் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவங்கி வைத்தார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த ஐ பிளஸ் நிர்வாக இயக்குனர் ஜான், ரோஸ்லெட் மருத்துவமனை மருத்துவர் திருமதி. நிவேதிதா ரோஸ்லின், ஈரோடு புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பலவேந்திரம், துணை முதல்வர் கில்பர்ட், கோபி புனித தெரசா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரசு தாமஸ், வட தமிழ்நாடு அகில பாரதிய வித்யார்த்தி பரீட்சத்தின் மாநில இணை செயலாளர் வேதாஞ்சலி, ஒலியியல் மற்றும் பேச்சு நிபுணர் மருத்துவர் ஷெர்லி, உடற்பயிற்சியாளர்கள் சுஜித் மற்றும் லிங்கம், பொறியாளர் தங்கபாலு ஆகியோர் முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகவும் மதிப்பீட்டாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

1500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பெற்றோரும் மாணவர்களும் அறிவியல் கண்காட்சியையும் கோளரங்கையும் மிகவும் ஆர்வத்துடன் முதல் நாள் கண்டுகளித்தனர். மாணவர்களின் படைப்புகளையும் வெகுவாக பாராட்டினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் கோவை ஏர்போர்ட் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் PMJFடாக்டர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உறுப்பினர் செல்வகுமார், கோவை ஏர்போர்ட் அரிமா சங்க மண்டல தலைவர் MJF டாக்டர். ஆனந்த், ரத்தினம் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் டாக்டர். சபரிஷ், அனுராக் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் டாக்டர் ஜான் ஏ.சி.தனகுமார், டிரான்சென்டென்ட் எனர்ஜி டெக் இயக்குனர் வின்சென்ட் பால் ரொசாரியோ, கேரிஸ் சூப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குனர் ரேமன்ட், ராபிட் டார்ட்டாய்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் நிசார் அஹமத், டி பென்ஸ் கார்ப் நிர்வாகத் தலைவர் பெனாசிர், சாம் இன்டீரியர் நிர்வாகத் தலைவர்கள் அஸ்லி சாமுவேல் மற்றும் ஷீபா அஸ்லி, ரத்தினம் கட்டிடக்கலை கல்லூரி துறைத் தலைவர் பால திலீபன், பேராசிரியர் டாக்டர். மேரி ஏஞ்சலின், 65வது வார்டு கவுன்சிலர் அம்சவேணி மணிகண்டன் ஆகியோர் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் மதிப்பீட்டாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இதுவரை 400க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கினை கண்டு களித்திட பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கண்காட்சியைக் காணவரும் பெற்றோருக்கும் பொது மக்களுக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மூன்றாம் நாள், மார்ச் 16 அன்று அறிவியல் கண்காட்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினுடைய கோவை கிழக்கு மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, கோவை கிழக்கு மாநகர் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் தனபால், 54 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடி சிறப்பித்தனர்.

விடுமுறை நாள் என்பதால் 4000க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மேலும் இரண்டு நாட்கள் இக்கண்காட்சியை நீட்டிக்க வேண்டுமாய் வேண்டுகோள் வைத்தனர். இதனை பரிசீலித்த பள்ளி நிர்வாகம் இரண்டு நாட்கள் நீட்டிப்பு செய்தது.

ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அறிவியல் கண்காட்சியை குடும்பத்துடன் வந்து ஆர்வமாக கண்டு களித்தனர். மேலும் நேற்று (திங்கட்கிழமை) அறிவியல் கண்காட்சி நடைபெற்று முடிந்தது.

படிக்க வேண்டும்

spot_img