fbpx
Homeபிற செய்திகள்நெல்லிக்குப்பம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நெல்லிக்குப்பம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை சிறப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லிக் குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி, டேனிஷ் மிஷின்மேல் நிலைப்பள்ளி, வரக்கால்பட்டு அரசு பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வாக்குச்சாவடி மையத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்றுவரும் வகையில் சாய்தள வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் வெயிலால் பாதிப்பு அடையாமல் இருக்க வாக்குச்சாவடி மைய வளாகத்தில் பந்தல் அமைப்ப தோடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img