fbpx
Homeபிற செய்திகள்தொழிற்துறை நீரின் மறுபயன்பாட்டு நடவடிக்கை நிதிஆயோக் துணைத் தலைவர் சுமன்பெரி பாராட்டு

தொழிற்துறை நீரின் மறுபயன்பாட்டு நடவடிக்கை நிதிஆயோக் துணைத் தலைவர் சுமன்பெரி பாராட்டு

‘இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 6.2 பில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத தொழிற்துறைக் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது’ என எஃப்ஐசிசிஐ ஏற்பாட்டில் நடைபெற்ற 13-வது ஐடபிள்யூஏ தண்ணீர் மீட்பு மற்றும் மறு பயன்பாடு மாநாட்டில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: பிரம்மாண்ட ஆற்றல் நிறைந்த தண்ணீர் மற்றும் கழிவுநீர்த் துறையின் சந்தைப் பங்கு ஒவ்வொரு ஆண்டும் 15% முதல்- 20% வரை வளர்கிறது. தண்ணீர் பயன்பாட்டின் சுழற்சியில் நகர கழிவுநீர் மேலாண்மை முக்கிய அங்கம் வகிக்கிறது.

தொழிற்துறை, விவச £யம், நகராட்சிகளுக்குச் கூடுதலாகச் சுத்திகரி க்கப்பட்ட கழிவுநீரை வழங்கலாம். இதன் மூலம் நிலத்தடி தண்ணீரைச் சார்ந்திருப்பதையும் குறைக்கலாம். இந்திய தொழிற்துறை தண்ணீரின் மறுபயன்பாட்டுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் அங்கீகரிக்கத்தக்க வகையில் பாராட்டுக்கு உரியவை.

இருப்பினும், 95% தண்ணீர் தேவைப்படும் விவசாயம் மற்றும் உள்ளூர் துறைகளில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது.

வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீ ரின் தர அளவுகளை, இந்தியத் தரக் கட்டுப்பாடு அமைப்புகள் இதுவரை நிர்ணயிக்கவில்லை. எனவே, பாசனப் பணிகளுக்காகச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீ ரைப் பயன்படுத்த ஐஎஸ்ஓ வெளியிட்ட வழிகாட்டு தல்களை பயன்படுத்தலாம் என்றார்.

ஷிவ்தாஸ் மீனா
தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் விநியோகத் துறை, கூடுதல் முதன்மைச் செயலர் ஷிவ் தாஸ் மீனா பேசியதாவது:
பயன்பாட்டைப் பொறுத்துச் சுத்திகரிக் கப்பட்ட தண்ணீரின் பயன்பா ட்டைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும். அதன் பின்னர் அத்தண்ணீ ருக்கான தர அளவுருக்களை நிர்ணயிக்க வேண்டும்.

மறுபயன்பாட்டுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தர அளவுருக்கள் கட்டுமானத் துறைக்கும், விவசாயத் துறைக்கும் வெவ்வேறாக இருக்கும். அதேபோல், விவசாயத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் பயன்பாட்டில் நுண் பாசன முறையைப் பின்பற்றினால் செலவு குறைவதுடன் விரிவான பாசனப் பரப்பையும் உறுதிப்படுத்தலாம்.

சிங்கப்பூரில் செய்வதுபோல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் நீர்த் தேக்கங் களை மீள்நிரப்பவும், நீர்நிலைகளைப் புத்துணர் வூட்டவும், தண்ணீருடன் கலக்கவும் பயன்படுத்தப்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்ய ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்றார்.

“நம்பிக்கை உருவாக வேண்டும்”

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சகக் கூடுதல் செயலர் (ஏ அண்ட் சிவி) டி தாரா பேசியதாவது:
தண்ணீரைப் பாதுகாக்கத் தவறினால் எங்குமே பாதுகாப்பாக வாழ முடியாது. பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் நெகிழ்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் தீர்க்க முடியும்.

கழிவு நீரைச் சுத்திகரிக்கப்பட்ட நல்ல தண்ணீராக விவசா யத்துக்குப் பயன்படுத் தினால், நகரங்கள் தண்ணீர் நுகர்விடங்களாக இருப் பதற்குப் பதிலாகத் தண்ணீர் உற்பத்தி மையங்களாக மாறும். தண்ணீரை வெளியேற்றுவதற்கான தரநிலைகள் உள்ள நிலையில், அதை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் எந்தவொரு தரக் கட்டுப்பாடும் இன்றைக்கு இல்லை.

பல்வேறு தரநிலை களை ஏற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு பயனீட்டாளர்களுக்குத் தர நிலைகளை நிர்ணயிப்பது பற்றி விவாதிக்க வேண்டும்.
தண்ணீர் துறையில் நம்பிக்கை அடிப் படையிலான அமைப்பை உருவாக்க வேண்டும்.

நீங்கள் விநியோகிக்கும் தண்ணீர் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்து, அது நன்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எதுவாக இருப்பினும், குடிப்பதற்கு உகந்தது என நிரூபித்தால் மக்கள் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொண்டு பயன்படுத்துவார்கள் என்றார்.

ஐடபிள்யூஏ தலைவர் டாக்டர் தாமஸ் மைக்கேல் மோலெங்காஃப் பேசுகையில் ‘கரிமம் மற்றும் பசுமை இல்ல உமிழ்வுகளைக் குறைக்க வேண்டியது அவசியம். மேலும் தண்ணீர் ஆதாரங்களைப் பாதுகாத்துச் சிறந்த எதிர் காலத்துக்கான வலைப் பணியைக் கட்டமைத்து உதவ அனைவரும் முன் வர வேண்டும்’ என்றார்.

ஐடபிள்யூஏ மறுபயன்பாடு சிறப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஜோசஃப் லான்ஸ்டெய்னர், எஃப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் டாக்டர் ஜிஎஸ்கே வேலு ஆகியோர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img