ஈரோடு கங்காபுரத்தில் செயல்படும் டெக்ஸ்வேலி யில் நடைபெற்ற ஜவுளி உற்பத்தி துறை யினர் உடனான சந்திப்பின் போது இந்திய ஐடிஎம்இ சொசைட்டியின் பொரு ளாளர் எஸ்.செந்தில்குமார் பேசியதாவது:
எதிர்காலத்துக்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில் நுட்ப சூழலை உருவாக்க இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திர கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் 95 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், 1,800க் கும் மேற்பட்ட கண் காட்சியா ளர்கள் பங்கேற்க உள்ள னர். இந்த கண்காட்சி நார், நூல் மற்றும் துணி வகைகள் முதல்முழுமை யாக தயாரிக்“கப்பட்ட ஆடைகள் மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் வரை ஒட்டு மொத்த ஜவுளித் துறைக்கான அதிநவீன கண்டு பிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் காட் சிப்படுத்தப்பட உள்ளன.
2 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 18 அரங்குகளில் இக்கண் காட்சி நடைபெற உள்ளது. ஜவுளி உற்பத்தியை முற்றி லும் மாற்றியமைக்கும் ஆட் டோமேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம் பட்ட இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளும், கருத்த ரங்குகள், குழு விவாதங்கள், துறைசார் வல்லுநர்களின் உரையாடல்களும் இடம்பெற உள்ளன. இதில் ஈரோடு ஜவுளி உற்பத்தித் துறையினர் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும், என்றார்.
இந்நிகழ்வில் ஈரோடு சிஐஐ சேர்மன் வி.பி.சிவ சுப்பிரமணியம் தமிழ் நாடு நெசவாளர்கள் சங்கங் களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர், பா.சுந்தரவேல், மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தித் துறையினர் பங்கேற்றனர்.



