Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் பரோடா விபத்தில் உயிரிழந்த வெள்ளகோவில் காவலர்குடும்பத்துக்கு ரூ1.40 கோடி விபத்து காப்பீடு வழங்கியது

பேங்க் ஆஃப் பரோடா விபத்தில் உயிரிழந்த வெள்ளகோவில் காவலர்குடும்பத்துக்கு ரூ1.40 கோடி விபத்து காப்பீடு வழங்கியது

விபத்தில் உயிரிழந்த வெள்ளகோவில் காவல் நிலைய காவலர் ரவிச்சந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான விபத்து காப்பீட்டுத் தொகையை பேங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது.
ரவிச்சந்திரன், திருப்பூர் கிளையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடாவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகுப்பு கணக்கை (Salary Package Account) வைத்திருந்தார். பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் இந்தச் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் உள்ள விபத்து காப்பீட்டைப் பெற தகுதி உள்ளவர்கள் ஆவர்.

ரூ.1.40 கோடி காப்பீட்டுத் தொகை, உயிரிழந்தவரின் மனைவியும் வாரிசுதாரருமான பிரியதர்ஷினிக்கு வழங்கப்பட்டு, அத்தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கோவை பிராந்திய பேங்க் ஆஃப் பரோடா சார்பில் பிராந்திய மேலாளர் கமலக்கண்ணன், முதன்மை மேலாளர் குமரகுரு மற்றும் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் (IG) ரம்யா பாரதி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சிரிஷ்டி சிங் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், இக்காப்பீட்டுத் தொகை வாரிசுதாரரிடம் முறையாக வழங்கப்பட்டது.
எதிர்பாராத சூழல்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பதிலும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உதவிகளை வழங்குவதிலும் வெறும் சம்பளக் கணக்கு மட்டுமல்ல; சேவை செய்பவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பையும் பேங்க் ஆஃப் பரோடாவின் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img