fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரத்தில் டிராகன் பழம் சாகுபடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரத்தில் டிராகன் பழம் சாகுபடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 1 ஹெக்டர் பரப்பளவில் ரூ.96,000 மதிப்பிலான அரசு மானியத்துடன் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிராமத்தில், தோட் டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட் டக்கலை இயக்கத்தின்கீழ், 1 ஹெக்டர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற் கொள்ளப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட் சியர் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிரா மத்தில், தோட்டக்கலை மற் றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் சுமித்ரா என்பவரால் விளைநிலத்தில் 1 ஹெக்டர் பரப்பளவில் ரூ.96,000 மதிப்பிலான அரசு மானியத்துடன் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது.
டிராகன் பழமானது தற் பொழுது அதிகப்படியான நபர் கள் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது. இப்பழமானது 1 ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் வரை விளைச்சல் கிடைக்கக்கூடிய தன்மை கொண் டதாக உள்ளது. டிராகன் பழம் பயிரிடுவதற்கு அதிகப்படியான சூரிய வெளிச்சமும், விளைச்சல் மேற்கொள்வதற்கு குறைந்த அளவே நீர் ஆதாரமும் போது மானது.

இது விளைச்சல் அதிகம் உள்ள காலங்களில் கிலோ ரூ.150க்கும், விளைச்சல் குறை வான காலத்தில் ஒரு பழம் ரூ.100க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. விவசாயி சுமித்ரா தங்களுடைய விளை நிலத்தில் வளரக்கூடிய டிராகன் பழங்களை திண்டிவனம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் இதுபோன்ற அதிக லாபம் தரும் பயிர் வகைகளை பயிரிடுவதற்கு தேவையான வழிமுறைகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் அறிந்துகொண்டு தாங்க ளும் காலத்திற்கேற்றவாறு பயன் தரக்கூடிய பயிர்வகைகளை பயிர் செய்து பயன்பெற வேண்டும்“ என்றார்.

இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் ராஜ லட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img