fbpx
Homeபிற செய்திகள்நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி துவக்க விழா

நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி துவக்க விழா

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது. இதனை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்திக் ராஜா துவக்கி வைத்தார்.


இந்த கண்காட்சியில் கணபதி, சிவன்பார்வதி குடும்பம், தசாவதார, கல்கத்தாகாளி, கார்த்திகை பெண்கள், கிருஷ்ணன், குபேரர் ஆகிய செட் பொம்மைகள் உள்ளது.

மேலும், லட்சுமி, துர்க்கை, கோமாதா, மீனாட்சி, ரெங்நாதர், மாரியம்மன், தஞ்சாவூர் தலையாட்டி, மீரா, தியாகராஜர், புத்தர் ஆகிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு சிறப்பு அறிமுகமாக கல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 4 ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.


வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் பொம்மைகள் விற்பனை செய்யப்படும் என மேலாளர் சக்திதேவி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img