ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத் தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2024& -25 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரத்னா ரெசிடன்சி அரங்கில் நடைபெற்றது.
நிறுவன தலைவர் வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கோவை மண்டல பிராவிடன்ட் பண்ட் கமிஷனர் வைபவ் சிங் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மெம்பர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் பிரபு சங்கர், ரோட்டரி சங்கத்தின் மூலமாக சமுதாயத்திற்கு பலவித சேவைகள் செய்து வருவதாகவும் அதில் முக்கியமான சேவைகளான தண் ணீர், சுகாதாரம், குழந்தைகள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகள், பெண்களுக்கான மருத்துவ விழிப்புணர்வுகள், வயதா னோருக்கான சேவைகள் போன்ற முக்கியமான சேவைகளை செய்து வருவதாக கூறினார்.
விழாவில் புதிய தலைவராக ரோட்டேரியன் டாக்டர் உமா பிரபு பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், தன்னை முழுமையாக சமுதாயத்திற்கு சேவை செய்ய அர்ப்பணித்துக் கொள்வதாகவும், பலவிதமான திட் டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
விழாவில் நன்றியுரை கூறிய செயலாளர் அம்பலவாணன் பேசுகையில், பலவிதமான சேவைகளை சமுதாயத் திற்கு செய்ய இருப்பதாகவும் தின மணி நாளிதழுடன் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு தினசரி நாளிதழ் படிக்கக்கூடிய ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு சிறப்பான ஒரு செயல்பாடு அமைக் கப்பட்டு வருகிறதென்றும் கூறினார். இத்திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்கவுள்ளதாக வும் அதன் மூலமாக பள்ளிக் குழந் தைகளுடைய பொது அறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்ப டும் என்றும் எடுத்துக்கூறினார். நிகழ்ச்சி யில் ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் ராஜன் ஆறுமுகம், சந்தோஷ் பிள்ளை, ராஜசேகர், சரவணன், ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.