இந்தியாவின் மிகப்பெரிய நிதிச் சேவை குழுமங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் குழுமம், ஏப்ரல் 2-ம் தேதி 23 நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள 65 நகரங்களில் ‘ஐ.ஐ.எஃப்.எல் ஜிட்டோ அஹிம்சா ஓட்டம்’ மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைபடைக்கவிருக்கிறது.
இது அமைதி மற்றும் வன்முறையின்மைக்குமாக நடத்தப்படும் மிகப் பெரிய ஓட்டமாகும். ஜிட்டோவின் (ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு) மகளிர் பிரிவு மற்றும் ஐ.ஐ.எஃப்.எல் ஆகியவற்றுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள ஜிட்டோ தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களால் இந்த ஓட்டம் ஓழுங்கு செய்யப்படுகிறது. ஐ.ஐ.எஃப்.எல் ஜிட்டோ அஹிம்சா ஓட்டத்தில் பங்கேற்க https://ahimsarun.com/ என்ற இணைப்பில் பதிவு நடந்து வருகிறது.
மகாவீர் ஜெயந்திக்கு முந்தைய நாளில் ஐ.ஐ.எஃப்.எல் ஜிட்டோ அஹிம்சை ஓட்டத்தை நடத்துவதன் மூலம், பகவான் மகாவீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு இதைவிட சிறந்த நாள் வேறு எதுவாக இருக்க முடியும். ஓட்டத்தின் முக்கிய கருத்து கூட்டு வலிமை மற்றும் அனைவரும் பங்கேற்றலாகும்.
இந்தியா முழுவதிலும் உள்ள பல பிரபலமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐ.ஐ.எஃப்.எல் அறக்கட்டளை பெண் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக பெரிய அளவில் செயல்படுகிறது.
36,000 க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா பெண் குழந்தைகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளது. ஐ.ஐ.எஃப்.எல் குழுமத்தின் நிறுவனர் நிர்மல் ஜெயின் ஆவார்.



