தேனியில் புதிதாக கட்டப்பட் டுள்ள ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட ஆட்சித்தலைவரின் நிதியிலிருந்து ரூ.31.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப் பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய பாரதி, நகர்மன்ற தலைவர்கள் ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர்கள் தங்கவேல் (பெரியகுளம்), சக்கரவர்த்தி (தேனி), மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



