தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வெகுசிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
பணிக்கு செல்லும் மகளிர்க்கு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களின் வாயிலாக மகளிர்களின் பொருளாதாரம்; உயர செய்வதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடி திட்டம் தமிழ்நாட்டில் 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில் ‘கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் குடிசைகளை மாற்றி பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் பெயர் தான் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஆகும்.
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2030 ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லா தமிழகம்” என்ற இலக்கை அடையும் பொருட்டு 19 பிப்ரவரி 2024 அன்று தமிழக சட்டப்பேரவையில் 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு “கலைஞரின் கனவு இல்லம் திட்டம்“ தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்டவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.10 லட்சம் வீதம் ரூ.3100 கோடி நிதிக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் வீடுகள் வழங்கப்பட்டது. அரசால் 2025-2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில் அறிவித்தபடி, 2025-2026 ஆம் ஆண்டிற்கும் இத்திட்டத்தினை நீட்டிக்க உத்தேசித்து மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில், 2024- &2025 ஆம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உதகையில் 255 வீடுகளும், குன்னூர் பகுதியில் 139 வீடுகளும், கோத்தகிரி பகுதியில் 269 வீடுகளும், கூடலூர் பகுதியில் 634 வீடுகளும் என மொத்தம் 1297 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், உதகையில் 235 வீடுகளும், குன்னூர் பகுதியில் 132 வீடுகளும், கோத்தகிரி பகுதியில் 251 வீடுகளும், கூடலூர் பகுதியில் 488 வீடுகளும் என மொத்தம் 1106 வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளது. மீதமுள்ள 191 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், 2025-2026 ஆம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உதகையில் 207 வீடுகளும், குன்னூர் பகுதியில் 88 வீடுகளும், கோத்தகிரி பகுதியில் 337 வீடுகளும், கூடலூர் பகுதியில் 764 வீடுகளும் என மொத்தம் 1396 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி சந்தோஷ்குமார் கூறியதாவது:
நான் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மன ட்டி ஊராட்சியில் புதுவீடு கெந்தொரை குக்கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவன். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் அப்பா அம்மாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். எனக்கு வீடு கட்ட போதிய நிதி இல்லை. இச்சூழ்நிலையில் எங்கள் ஊர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதை தொடர்ந்து, வீடு வேண்டி விண்ணப்பம் செய்தேன். எனக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மற்றும் கழிப்பறை கட்ட கூடுதலாக ரூ.12,000/- மதிப்பீட்டில் வீடு கட்ட அனுமதி கிடைத்தது. இதனால் எனது குடும்பம் தற்போது பாதுகாப்பான குடியிருப்பில் வசித்து வருகிறோம் என்ற மன நிம்மதி அடைகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி பரமசிவம் தெரிவித்ததாவது:
நான் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பாலக்கொலா ஊராட்சியில் மஞ்சகம்பை குக்கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவன். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தேன். நான் வசித்து வந்த வீடு மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் வந்து விடும். இதனால் நாங்கள் மழைக்காலங்களில் மிகுந்த பயத்துடனே வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் நான் கிராம சபை கூட்டத்திற்கு சென்றபோது கலைஞரின் கனவு இல்லத்திட்டம் தொடர்பாக எடுத்துரைத்ததை தொடர்ந்து கிராம சபையில் வீடு வேண்டி விண்ணப்பம் செய்தேன். கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மற்றும் கழிப்பறை கட்ட கூடுதலாக ரூ.12,000/- மதிப்பீட்டில் வீடு கட்ட அனுமதி பெற்றேன். இதனால் எனது குடும்பம் தற்போது பாதுகாப்பான குடியிருப்பில் வசித்து வருகிறோம் என்ற மன நிம்மதி அடைகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பல சீரிய மருத்துவ திட்டங்களை அறிவித்து, அதனை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நெஞ்சம் நிறைந்த நன்றிகளை நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தெரிவித்து கொண்டனர்-.
தொகுப்பு:
ஜி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
நீலகிரி மாவட்டம்.



