fbpx
Homeதலையங்கம்2009ல் விடுதலைப்புலிகள்- 2023ல் ஹமாஸ் இயக்கம்?

2009ல் விடுதலைப்புலிகள்- 2023ல் ஹமாஸ் இயக்கம்?

ஹமாஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய இருஅமைப்புகளையும் பற்றி உலகில் பொதுவாக அதிகம் பேசப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளையும் 1997 அக்டோபர் 8ஆம்தேதியன்று வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா அறிவித்தது.

இலங்கை ராணுவம், 2009 நடுப்பகுதியில் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்தையும் விடுதலைப் புலிகளையும் ஒழித்தது.
அந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களும் பலியானார்கள். புலிகள்அமைப்பைப் போலவே ஹமாஸ் இயக்கத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.

உறுதியான நோக்கம் உண்டு.அப்போதைக்கு அப்போது உத்திபூர்வமான முறையில் தன்னைச் சரிசெய்துகொள்ளும் ஆற்றலும் அதனிடம் இருக்கிறது.
புலிகள் சில நேரங்களில் கொழும்புடன் நடந்து கொண்டதைப் போலவே ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலுடன் தந்திரமாக நடந்து கொண்டதுண்டு.

பாலஸ்தீன நிர்வாகத்தைப் பலவீனப்ப டுத்துவதற்காக இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை அனுசரித்து நடந்துகொண்டதும் உண்டு. காஸாமக்கள் இஸ்ரேலுக்குள் வேலைக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்.

இருந்தாலும்கூட அந்த நடவடிக்கை, இஸ்ரேலைஎதிர்க்கவேண்டும் என்ற ஹமாஸ் உறுதியை அசைக்கவில்லை. ஹமாஸ்அமைப்பு, காஸாவில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஏவுகணைகளால் பயங்கரமாகத்தாக்கியது.

அதற்குப் பதிலாக இஸ்ரேல் அடி கொடுத்து வருகிறது.
இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இப்போதையஇஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினையில் பாலஸ்தீனர்கள் தெற்கே சென்றுவிட வேண்டும் என்று இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து காஸாவிலேயே தங்கி இருக்கும்படி ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனர்களைக் கேட்டுக்கொண்டது.
இதுவும் விடுதலைப்புலிகள் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. புலிகள்& -ஹமாஸ் இரண்டின் செயல்முறைகளும் ஒத்து இருந்தாலும் இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.

விடுதலைப் புலிகளைப்பொறுத்தவரை அவர்க ளுக்குப் புவிசார் அரசியல் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஹமாஸ் அமைப்புக்கு அப்படி அல்ல.புலிகளுடன் ஒப்பிடும்போது ஹமாஸ் அமைப்பிடம் அதிக தலைமைத்துவ பலம் இருக்கிறது.
இப்போதைய போர்க்களத்தில் தற்போது இஸ்ரேல் வெற்றி முகத்தில் இருந்தாலும் போர் விரைவாக முடிவுக்கு வருமா? என்பது சந்தேகம் தான்.
இஸ்ரேலை அழிப்பது என்ற ஹமாஸ் இயக்கத்தின் நோக்கம் கைகூடுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

அதேநேரத்தில்அனைத்து பாலஸ்தீன எதிர்ப்பை முற்றிலும் அகற்றுவது என்ற இஸ்ரேலின் நோக்கம் கைகூடுமா? 2009ல் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட நிலை 2023-2024ல் ஹமாஸ் இயக்கத்துக்கு ஏற்படுமா? உக்ரைன் & ரஷ்யா போர் போல நீண்டு கொண்டே போகுமா? அல்லது இருதரப்பினர் நோக்கமும் முழுமையாக நிறைவேறாமல் போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img