உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற விருதினைப் பெற்றது.
இதன் மூலம், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்த விருதைப் பெறும் சாதனையை நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இவ்விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராகவும், சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் சுமன் பில்லா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குநர் அஸ்வனி லோஹானி, இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் ஆகியோரும் பங்கேற்றனர்.
“இந்த விருது எங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், ஊடகக் கூட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. அவர்களின் நம்பிக்கையே எங்களை தொடர்ந்து புதுமை செய்து மேம்பட்ட சேவைகளை வழங்க தூண்டுகிறது,” என ஜி.டி. ஹாலிடேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



