fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் பசுமை சாம்பியன் விருதுகள்

விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் பசுமை சாம்பியன் விருதுகள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர், அமைப்பு, கல்வி நிறுவனம் என மூவருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற் றும் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகைகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவிலான வெற்றியாளர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்தது. அதன்படி நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்ப வருக்கு தனிநபர் பிரி விலும், சிவகாசி பேஸ் புக் பிரண்ட்ஸ் என்ற அமைப்புக்கும், மல்லாங் கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுதா என்பவருக்கு கல்வி நிறுவன பிரிவி லும் என மூன்று வெற்றியா ளர்களுக்குப் பசுமை சாம் பியன் விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை அமைச் சர் வழங்கி கௌரவித்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB) மூலம் ஒருங் கிணைக்கப்பட்ட இந்த விருதுகள், கல்வி நிறுவனங் கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டும் முன்மாதிரியான முயற்சி களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள் ளன. இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) இலக்குவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர்), காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், உள்ளாட்சி பிர திநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img