fbpx
Homeபிற செய்திகள்ரூ.1 கோடியில் அரசு பள்ளி மேம்பாடு; ஸ்மார்ட் கிளாஸ், கணினி வசதிகள் திறப்பு

ரூ.1 கோடியில் அரசு பள்ளி மேம்பாடு; ஸ்மார்ட் கிளாஸ், கணினி வசதிகள் திறப்பு

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அரசுமேல் நிலைப்பள்ளியில், கே.பி.ஆர். குழுமத்தின் சமூகப்பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி மேம்பாட்டுப்பணிகள் நிறைவடைந் தன. இதை யொட்டி, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள், நூலகம், கணினி ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளை கே.பி.ஆர் தலைவர் கே.பி.ராமசாமி திறந்து வைத்தார்.

இதில் மூன்று வகுப்பறைக் கட்டிடங்கள் முழு மையாக புனரமைக்கப்பட் டதுடன், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத் தும் வகையில் நவீன நூலகம், கணினி வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் அடிப்படை கல்வி உள்கட்டமைப்புகளும் உரு வாக்கப்பட்டுள்ளன.விழாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் நிர் வாகிகள், ரோட்டரி சங்கநிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர். அரசுபள்ளி மேம் பாட்டிற்கு வழங்கப் பட்ட பங்களிப்புக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

படிக்க வேண்டும்

spot_img