fbpx
Homeபிற செய்திகள்அரசு அலுவலர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரசு அலுவலர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்த சாமி வெள்ளியன்று அரசு அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், பணியிடமாறுதல், பணி மாறுதல், பதவி உயர்வு, மருத்துவக் காப்பீடு, செலவினம் உள் ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை ஈரோடு மாவட்ட அரசுப் பணியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, தகுதியுடைய கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இன்றைய குறைதீர் கூட்டத்தில் 21 அரசுப் பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, அலுவலக பொது மேலாளர் பால சுப்பிரமணியம் உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img