கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பாதுகாப்பு அறையினை நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சிபி ஆதித்யா செந்தில் குமார் திறந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வுமேற் கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம், வாக் குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து தெளிவுப டுத்திடவும், வெளிப்படை தன்மையு டன் இருப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்திடும்வகையில் ஒவ்வொரு காலாண் ற்கும், பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரமுகர்கள் முன்னிலையில் திறந்து காட்டிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திறந்து பார்வையிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், தேர்தல்தாசில் தார் சுரேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



