தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரியில் ரூ.5900க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், தற்போது ரூ.6,820க்கு விற்பனையாகி வருகிறது. 5 மாதங்களில் பவுனுக்கு ரூ.7,360 அதிகரித்துள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 100 ரூபாய் விலை அதிகரித்தால், 10 ரூபாய் மட்டுமே விலை குறைவு இருக்கும் அளவுக்கே இதன் ஏற்ற இறக்கம் இருந்தது.
ஜூலை 1ம் தேதி ரூ.6,685க்கும், 2ம் தேதி ரூ.6,690க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கடந்த 3ம் தேதி ரூ.6,695க்கு விற்பனையான தங்கம் 4ம் தேதி கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதனிடையே, தங்கம் விலை இன்று மீண்டும் தடாலடியாக கிராமுக்கு ரூ.60 விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ.6,820 க்கும் ஒரு பவுன் ரூ.54,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5587க்கும், பவுன் ரூ.44,696க்கும் விற்பனையாகிறது.
நேற்று கிராம் ரூ.94.70க்கு விற்பனையான வெள்ளி தற்போது ஒரு கிராம் ரூ.99.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.