கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்க நகை மற்றும் வைர நகைகள்கண்காட்சி விற்பனை தொடக்க விழா “கலாஷா பைன் ஜூவல்லரி “ என்ற பெயரில் இன்று (16 -ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்கியது
விழாவுக்கு கலாஷா இயக்குனர் ஆஷிகா சந்தா, உரிமையாளர் ஷ்ரவன் குமார் கூடூர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வருகிற 18-ஆம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை கோவை பெண் தொழிலதிபர்கள் காயத்ரி சுரேந்திரன் சுஜாதா விஜயசேகரன், கருணப்பிரியா, சாந்தினி அனீஸ் குமார் வள்ளி மயில் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் வைர நகைகள் மற்றும் புது வகையான தங்க நகைகள் ஜடாவ் மற்றும் திருமண நகைகள் இடம் பெற்ற அரங்குகள் உள்ளன.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.



