ஜார்ஜியா தூதரகம், இந்திய மாணவர்களின் வெளிநாட்டுப் படிப்பை விரைவுபடுத்துவதற்காக, சென்னையில் உள்ள அக்கார்டு மெட்ரோ பாலிட்டன் ஹோட்டலில் வெளிநாட்டுக் கல்விக் கண்காட்சியை நடத்தியது.
இந்நிகழ்வில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1000-க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜார்ஜியா வின் 11 பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை ஆலோ சனை மற்றும் உதவித்தொகை பலன்கள், அவர்களின் பாடத்திட் டங்கள் குறித்து விளக்கினர்.
ஜோர்ஜியாவின் தூதுவர் திரு.ஆர்ச்சில் டுலியாஷ்விலி தெரிவித்ததாவது:
எங்கள் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆலோசகர்கள், வெளிநாட்டு கல்வி பற்றிய முழுமையான புரிதலை வழங்கினர்.
11 பல்கலைக்கழகங்கள்
மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான வரைபடத்தை வரையறு ப்பதில் முக்கிய பங்கு வகித்தனர் என்றார். ஜார்ஜியாவின் அல்டே பல்கலைக்கழகம், காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகம், டேவிட் ட்வில்டியானி மருத்துவ பல்கலைக்கழகம், காகசஸ் பல்கலைக்கழகம், கிழக்கு ஐரோப்பிய பல்கலை க்கழகம், ஐரோப்பிய பல்கலைக் கழகம், ஜார்ஜிய அமெரிக்க பல்கலைக்கழகம், ஜார்ஜிய தேசிய பல்கலைக்கழகம், குடைசி பல்கலைக்கழகம், கற்பித்தல் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகம் ஆகிய 11 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.
இக்கண்காட்சி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளைப் பற்றிய ஆழமான தகவல்களைப் பெறுவதற்கான தளமாகச் செயல்பட்டதுடன் ஜார்ஜியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் உயர்க ல்வியை எளிமையாக்கவும், மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத துறைகளுக்கும் பிரத்யேக வாய்ப்புகளை வழங்கியது.
இக்கண்காட்சியில் இந்திய மாணவர்கள், எம்பிபிஎஸ், பல் மருத்துவம், இளங்கலை வர்த்தக மேலாண்மை, மருந்தகம், நர்சிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் மற்றும் பிற படிப்புகள் அடங்கும். செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினர்.



