fbpx
Homeபிற செய்திகள்ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலுவுக்கு ஜப்பான் மருத்துவ மாநாட்டில் கௌரவ விருது

ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலுவுக்கு ஜப்பான் மருத்துவ மாநாட்டில் கௌரவ விருது

ஜெம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.பழனிவேலுக்கு அக்டோபர் 23 முதல் 28 தேதி வரை ஒசாகாவில் நடைபெற்ற ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (JATS) 78வது ஆண்டு அறிவியல் மாநாட்டில் மதிப்புமிக்க வெளிநாட்டு கௌரவ உறுப்பினர் பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


JATS 2025 மாநாட்டின் தலைவரும், கிண்டாய் பல்கலைக்கழகத்தின் உணவுக்குழாய் -இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவின் பேராசிரியருமான தகுஷி யசுடா பேசுகையில், “ஜப்பான் முழுவதும் டாக்டர் சி.பழனிவேலுவின் நுண்துளை உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான பங்களிப்புகளை அங்கீகரித்து இந்த அழைப்பை தனிப்பட்ட முறையில் வழங்கினர்.

மாநாட்டின் சிறப்பு விழாவில் இந்த கௌரவம் வழங்கப்பட்டது. அங்கு டாக்டர் சி.பழனிவேலு சர்வதேச தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முன்னிலையில் குறைந்த பட்ச ஊடுருவும் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.


நவீன அறுவை முறை ஏற்றுக் கொள்ளுதலையும் பெற்றுள்ளது. பல சர்வதேச அங்கீகாரத்தையும் பரவலான ஆய்வுகள் இதன் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளன மற்றும் பாரம்பரிய அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது சமமான அல்லது சிறந்த முடிவுகளை வழங்குகின்றன என்பதை நிரூபித்துள்ளன” என்றார்.


இது அறுவை சிகிச்சை புற்றுநோயியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். உணவுக்குழாய் புற்றுநோய் நோயாளிகளுக்கு மேம்பட்ட உயிர்வாழ்வு மற்றும் வாழ்க் கைத் தரத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது சிறந்த முடிவுகளுக்கு ஆரம்பக் கட்ட கண்டறிதல் மிகவும் முக்கியமானது.


இது குறித்து உலகிற்கு வழிகாட்டுதலில் சிறந்து விளங்கும் “ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று டாக்டர் சி.பழனிவேலு கூறினார்.”


தொடர்ந்து அவர் கூறியதாவது: ஜப்பான் முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, நோயாளிகளின் சிறந்த விளைவுகளுக்கு பங்களிப் பைக் காண்பது எந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கும் மிகப்பெரிய வெகுமதியாகும்.

இந்த கௌரவம் ஜெம் மருத்துவமனையில் உள்ள எனது குழுவினருக்கும், இந்த நுட்பத்தை ஏற்றுக்கொண்டு மேம் படுத்திய அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img