fbpx
Homeபிற செய்திகள்கீதாஜீவன் அறிவியல் கலைக்கல்லூரியில் 209 பேருக்கு பட்டங்களை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரை

கீதாஜீவன் அறிவியல் கலைக்கல்லூரியில் 209 பேருக்கு பட்டங்களை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரை

தூத்துக்குடி குறுக்கு சாலையில் உள்ள கீதா ஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் நடைபெற்ற 3வது பட்டமளிப்பு விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் முன்னிலை வகித்தார். ஆண்டறிக்கையை முனைவர் இளங்குமரன் வாசித்தார்.

அமைச்சர் கீதாஜீவன், 209 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் பள்ளி பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட நல்ஒழுக் கமும் கல்லூரியின் படிப்பும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாகவும் அமைகிறது.

ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்து புத்தகங்களின் பக்கங்களையும் முழுமையாக படித்து கல்வி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்.

இந்த கல் லூரியில் அனைவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். 19 பேர் மிகவும் சிறந்தவர்களாக சிறப்புக்குரியவர்களாக வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

படிக்கும் காலத் திலேயே அடுத்த இலக்கு என்ன என்பதை முடிவு செய்து முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும். எந்த பணி செய்தாலும் விருப்பமுடன் கடமை உணர்வோடு செய்யுங்கள், வெற்றி கிடைக்கும்.

கடமைக்காக எந்த பணி யையும் செய்யாதீர்கள். உங்களுடைய குடும்பத் தினரின் தியாகமும் ஆசிரி யர்களின் அர்ப்பணிப்பும் இன்று உங்களை புதிய வழிகளுக்கு அழைத்து செல்கிறது. கடந்து வந்த பாதைகளை திரும்பி பாருங்கள்.

நண்பர்களோடு பழகிய நட்பையும் பகிர்ந்து மகிழ்ந்த காலத்தையும் சிந்தித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியும் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையோடு செய்தால் எல்லோர் வாழ் விலும் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், டாக்டர் கீர்த்தனாமகிழ், சுதன்கீலர், சுதாசுதன், பல்லைக்கழக பிரதிநிதி முனைவர் சௌடியா, வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி தலைவர் அருண்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img