நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீரூடைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் தெரிவித்ததாவது :-
முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறி வித்து, அதனை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடு தல் கவனம் செலுத்தி, அதிக நிதி ஒதுக்கி, வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்கள். பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இல் லம் தேடிக் கல்வி திட்டம், காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் உதவித்தொகை, மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசால் துவங்கப்படவுள்ள தமிழ் புதல்வன் திட்டம், படித்து முடித்து வேலை நாடு நர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தருதல் போன்ற எண்ணற்ற அறிவிப்புகள், திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தலை மையிலான தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், காலை உணவுத்திட்டத்தை பொறுத்தவரை 316 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 11,164 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். புதுமை பெண் திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்தில் 1,067 மாணவியர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயன்பெற்று வருகிறார்கள். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் விலையில்லா சீரு டைகள் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் விலையில்லா சீருடை 2024-&2025 கல்வியாண்டில் வழங் ப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவ, மாணவி யர்களுக்கும் வருடத்திற்கு நான்கு இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. சீரு டைகள் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் சென்ற டைவதை உறுதி செய்யும் வகையில், இம்முறை தைக் கப்பட்ட சீருடைகள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையற் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் விநியோகம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 6,830 மாணவர்களும், 6,792 மாணவி யர்களும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 3,304 மாணவர்களும் மற்றும் 3,116 மாணவியர்களும் என மொத்தம் 20,042 மாணாக்கர்கள் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
அரசு பள்ளிகளில் கல்வி கற்றலும், உட்கட் டமைப்பு வசதிகளும் மேம்ப டுத்தப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்றுள் ளார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அர சுப் பள்ளிகளில் சேர்க்க முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன் தோஸ், உதகை வருவாய் கோட் டாட்சியர் மகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, உதகை வட்டாட்சியர் சரவணகுமார், உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதகை ஊரா ட்சி ஒன்றிய தலைவர் மாயன்(எ) மாதன், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷோபா, தொழிற்கூட்டுறவு அலுவலர் சுப்பிரமணி, தொழிற்கூட்டுறவு மேற்பார்வையாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.