Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஊழியர் மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நேற்று (16ம் தேதி) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.
இந்த மருத்துவப் பரிசோதனை முகாமில் கோவை, ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகின்ற தீபம் மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவருகின்ற தி ஜி பவுண்டேஷன் கண் மருத் துவமனை ஆகிய வற்றின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுப் பரிசோதனை செய்தனர்.

மருத்துவப் பரிசோ தனை முகாமை கல்லூரி யின் செயலர் மற்றும் இயக் குநர் டாக்டர் சி.ச.வாசுகி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வே.சங்கீதா முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய, எக்கோ மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளைக் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி ஊழியர் மன்றத்தின் தலைவர் முனைவர் கு.முத்துக்குமார், செயலாளர் முனைவர் கே.சரவணக்குமார், துணைத்தலைவர் முனைவர் ஆ.ரேவதி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் சிறப்பாகச் செய்தனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் அலுவலர்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img