கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை. பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றான இந்த அணை மற்றும் சோலையார் அணை மற் றும் நீரார் அணையை தேசிய அணை பாது காப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள் ளது.
இதற்காக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த அணையை மத்திய ஆணையத்தின் முன்னாள் தலைவரும், குழுவின் தலைவருமான பஜாஜ், உறுப்பினர்கள் செல்வம்(ஓய்வு பெற்ற நீர்வளத்துறை தலைமை பொறியாளர்) பத்மநாபன் (ஓய்வு) புவியியல் தொழில்நுட்ப பிரிவு நிபுணர் ஷிரிவல்சலா குழந்தையார், ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில்பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத் தின் கண்காணிப்பு பொறி யாளர் கார்த்தி கேயன், மண்டல பொறியாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



