Homeபிற செய்திகள்புலிக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர பயம்: மலைவாசி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய பன்னாட்டு...

புலிக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர பயம்: மலைவாசி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய பன்னாட்டு லயன்ஸ் இயக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ வேலி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் 2 பேரை சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கியது. அந்த மலை கிராமங்களில் தனித்தனியாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் வனவிலங்கு புலிக்கு பயந்து வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். அவர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இது பற்றிய தகவல், அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மூலம் லயன்ஸ் இயக்கத்திற்கு தெரிய வந்தது. பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242 சி ஆளுநர் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் பேரிடர் மாவட்ட தலைவர் கதிரவன், ஜி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் (நேரு நகர் லயன்ஸ் சங்கம்) தலைமையில் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் , மசாலா பொடிகள், பெட்ஷீட், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் கே.ஆர்.புரம், நேரு நகர், கூடலூர், கூடலூர் வெஸ்டன் காட்ஸ், உதகமண்டல், மகிழ்ச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.திராவிட மணி, கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் மி. கோபாலகிருஷ்ணன், ஓ வேலி டவுன் பஞ்சாயத்து தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் சகாதேவன், வழக்கறிஞர் பரசுராமன், கூடலூர் லயன்ஸ் சங்கத் தலைவர் தாமஸ் மற்றும் கவுன்சிலர் வர்கீஸ், கூடலூர் வெஸ்டன் காட்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் ரவிக்குமார், கே.ஆர். புரம் லைன்ஸ் சங்கத் தலைவர் செல்வ விநாயகம், உதக மண்டல் லயன்ஸ் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்.புரம் லயன்ஸ் சங்கத்தின் கார்த்திகேயன், ரவி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ வேலி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் 2 பேரை சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கியது. அந்த மலை கிராமங்களில் தனித்தனியாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் வனவிலங்கு புலிக்கு பயந்து வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். அவர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இது பற்றிய தகவல், அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மூலம் லயன்ஸ் இயக்கத்திற்கு தெரிய வந்தது. பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242 சி ஆளுநர் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் பேரிடர் மாவட்ட தலைவர் கதிரவன், ஜி.எம்.டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் (நேரு நகர் லயன்ஸ் சங்கம்) தலைமையில் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் , மசாலா பொடிகள், பெட்ஷீட், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் கே.ஆர்.புரம், நேரு நகர், கூடலூர், கூடலூர் வெஸ்டன் காட்ஸ், உதகமண்டல், மகிழ்ச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.திராவிட மணி, கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் மி. கோபாலகிருஷ்ணன், ஓ வேலி டவுன் பஞ்சாயத்து தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் சகாதேவன், வழக்கறிஞர் பரசுராமன், கூடலூர் லயன்ஸ் சங்கத் தலைவர் தாமஸ் மற்றும் கவுன்சிலர் வர்கீஸ், கூடலூர் வெஸ்டன் காட்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் ரவிக்குமார், கே.ஆர். புரம் லைன்ஸ் சங்கத் தலைவர் செல்வ விநாயகம், உதக மண்டல் லயன்ஸ் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்.புரம் லயன்ஸ் சங்கத்தின் கார்த்திகேயன், ரவி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img