fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி பிறந்த தின விழா: மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் எல்.முருகன்

பிரதமர் மோடி பிறந்த தின விழா: மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் எல்.முருகன்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் மேட்டுப்பாளையம் பத்திரப்பா சேரன் மஹாலில் தனியார் மருத்துவமனைகள் இணைந்து இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தினர்.

இந்த முகாமை மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சருமான எல்.முருகன் துவக்கி வைத்தார். அப்போது, அவரும் கண் பார்வை குறித்த சிகிச்சை மேற்கொண்டார்.

தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள், சிறுவர்,சிறுமியருக்கு இலவச மருத்துவ சிகிச்சை நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு இலவச பரிசோதனைகளும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

முகாமில் பாஜக நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நந்தகுமார்,மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் விக்னேஷ்,நகர தலைவர் உமாசங்கர்,சிறுமுகை ஒன்றிய தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img