கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.சி.ஏ.ஏ. ஹாலில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதிகள் சிவகுமார், ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் கோவை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், துணைத் தலைவர் ஞானசம்பந்தம், கோவை மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருது பாண்டியன், துணைத் தலைவர் சூரியகுமார், செயலாளர் மௌலி, பொருளாளர் பிரபு, இணை செயலாளர் கோகிலா, செயற்குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா, தர்ஷா, வினித், ஷோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



