கோவை பீளமேட்டில் உள்ள கோபால் நாயுடு பள்ளியில் மாணவ மாணவிகள் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன், மாநகராட்சி உறுப்பினர் அம்பிகா தனபால், ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் ரவி சாம், பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜ், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தனபால், பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், பள்ளி நிர்வாக அலுவலர் ரவி, கார்த்திக், பகுதி பொறுப்பாளர் மோகன்ராஜ், அனைத்து வாகன ஓட்டுநர்கள் அமைப்புசாரா தொழிற்சங்க அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வட்டக்கழக துணைச்செயலாளர் சாந்திநகர் செந்தில்குமார், வட்டக்கழக பிரதிநிதிகள் பூவை சுரேஷ், வேலுச்சாமி, பூபதி, கங்குவார் சீனு, பகுதி மகளிரணி துணை அமைப்பாளர் திலகவதி, மூத்த முன்னோடி அன்பழகன் அகமது பாஷா, தேவி, டைட்டஸ்., சரவணன், சித்தாப்புதூர் ரவி, லேஅவுட் துரை, கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை மற்றும் பில்ஏ 2, பிடிஏ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



