Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் நிறுவனர் தின விழா

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் நிறுவனர் தின விழா

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் தாளாளர் பி.என்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.ஏ.தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் வணிகவியல்துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் கருணையாத் தாள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பி.ஆர்.நடராஜன் அறக்கட்டளை நிதியிலிருந்து பள்ளி, கல்லூரி, மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இலவசக் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கணிதத்துறை முதன்மையர் த.ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img