செமிகண்டக்டர் துறைக்கு தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் கேய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிலிக்கான் சர்ஜ் நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒப்பந்தத்தில், சிஐடி நிறுவனத் தலைவர் ஸ்ரீராம், கேய்ன்ஸ் செமிகான் செயல்பாட்டுத் தலைவர் பால் இளங்கோவன் கையெழுத்திட்டனர்.
இதன்படி, இஎஸ்டிஎம் ஆய்வகங்கள் அமைத்தல், தொழில்துறை தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் சால்காம்ப் நிர்வாக இயக்குநர் அருள் பிரபு, சுச்சி செமிகான் தலைமை நிர்வாக அதிகாரி குணசேகரன், ஸ்டெல்த் மோட் ஸ்டார்ட்அப் இயக்குநர் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்



