தர்மபுரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை மற்றும் பருவநிலை சீதோஷ்ண நிலை மாறுபாடு பொருட்டு திரையரங் குகளை கண்காணித்து முறையான அடிப்படை வசதிகள் மற்றும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் காலாவதி தன்மை, வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவிட்டதன் பேரில் தர்மபுரி நகராட்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் தர்மபுரியில் செயல்பட்டு வரும் திரையரங்குகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் இரண்டு திரையரங்குகளில் உரிய தயாரிப்பு தேதி அச்சிடப்படாத ஜங் புட் ஸ்னாக்ஸ் வகைகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி இரண்டுக்கும் உடனடி அபராதம் தலா ரூ.1000 விதிக்கப்பட்டது.
பொட்டலம் இடப்பட்ட தின்பண்டங்கள், ஸ்னாக்ஸ் வகைகள் கண்டிப்பாக லேபிள் நடைமுறைகள், உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், தயாரிப்பு முகவரியுடன் விற்பனை செய்திட வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் வழங்கப்படும் இன்ஸ்ட ன்ட் டீ, காபி வகைகளின் தரமறிய இன்ஸ்டன்ட் டீ, காபி பவுடர் பாக்கெட்டுகளில் இருந்து மாதிரி எடுக்கப் பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
அனைத்து திரையரங்கு களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நுகர்வோர் காணும் வகையில் உரிய வகையில் வைக்கப்பட்டிருந்தது. அனைத்து திரையரங்குகளும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பார்வையில் காணும் வகையில்
காட்சிபடுத்திடவும், தின்பண்டங்கள் உணவு பொருட்கள், பேக்கரி வகைகள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்திட விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மேலும் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களோ, தின்பண்ட ங்கள் வழங்குதல் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ள ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள்க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நியமன அலுவலர் தெரிவித் தார்.



