வசதியற்ற மற்றும் வசதி குறைவான மக்களுக்கு கண் அறுவைசிகிச்சைகளை சாத்தியமாக்கும் குறிக்கோ ளுடன் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ‘ஐ ரீசர்ச் சென்டர்’ (Eye Research Centre),, பிர பல நடிகர் சித்தார்த்- ன் ‘சித்தா’திரைப்பட சாரிட்டி ப்ரீமியர் காட்சி வழியாக நிதியினை திரட்டியிருக்கிறது.
சீசன்ஸ் பிவிஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இச்சிறப்பான நிகழ்வு, சினிமாவின் ஈர்ப்பையும் மற்றும் மனிதாபிமானம் மிக்க கருணை உணர்வை யும் ஒருங்கிணைத்த தருணமாக இருந்தது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநர் டாக்டர் அதியா அகர் வால் பேசுகையில், “திரைப்படத் துறை ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பதற்கும் கூடுதலான இந்த தனிச்சிறப்பான நடவடிக்கை, பார்வைத்திறன் பிரச்சனைகளை கொண்டிருக்கும் நபர்களுக்கு பார்வைக் கான நம்பிக்கையையும், வாக்குறுதியையும் வழங்கும் ஒரு செயல்பாடாகவும் இருக் கிறது. இந்த திரைப்பட காட்சியின் வழியாக சேகரிக்கப்படும் நிதி, 40,000-க்கும் அதிகமான கருவிழி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ள எங்களை திறன் உள்ளவர்களாக ஆக்கும்.
பார்வைத்திறன் இழந்த மற்றும் பாதிப்புள்ள நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடியதாக இந்த அறுவைசிகிச்சைகள் இருக்கும். கருவிழி சார்ந்த நோயினால் பார்வையற்றவர்களாக மாறியிருக்கும் 13 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கையில் மீண்டும் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கு இந்த அறுவை சிகிச்சைகள் உதவும்” என்றார்.
“பண வசதியற்ற நபர்களுக்கு அறுவைசிகிச்சைகளை வழங்கும் நோக்கத்தோடு எமது மருத்துவமனை குழுமம் இந்த முன்னெடுப்பில் இணைந்திருக்கிறது” என்றார் குழுமத்தின் செயலாக்க இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால்.
திரைப்படத்தின் கதாநாயகன் சித்தார்த் கூறியதாவது: இது, வெறுமனே ஒரு ப்ரீமியர் திரைப்படக்காட்சி மட்டுமல்ல. எனது இதயத்திற்கு முக்கியமான, நல்ல நோக்கத்திற்கான பங்களிப்பை வழங்குவதற்கான தருணமாகவும் இருக்கிறது என்றார்.