Homeபிற செய்திகள்மருங்கூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்

மருங்கூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூரில் அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின்விவசாயநிலத்தில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருள்கள் கிடைத்தன.

மேற்கண்ட இடத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட் டோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கிடைத் தன. இதையடுத்து, இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், மருங்கூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, மருங்கூரில் முதல் கட்ட அகழாய்வு பணியை சென்னையில் இருந்தபடி முதல்வர் மு.கஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க் கிழமை “தொடங்கி வைத்தார். இதைய டுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் முன்னி லையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. இதில், அகழாய்வு இயக்குநர் ரா.சிவானந்தம், ஆக ழாய்வாளர்கள் கி.பாக்கியலட்சுமி, சி.சுபலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img