fbpx
Homeபிற செய்திகள்ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் நோயாளிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி

ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் நோயாளிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி

கோவையை தலைமையிடமாகக் கொண்ட ஜெம் புற்றுநோய் மையம், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்ற நோயாளிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியையும், “டாக்டர். ஜெம்“ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) அடிப்படையிலான புற்றுநோய் அறிவுத்தளத்தின் அறிமுகத்தையும் நடத்துகிறது.

இது குறித்து நிறுவனத் தின் தலைமை டாக்டர் பிரவீன்ராஜ் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்த தகவல் குழப்பம் நோயாளிகளுக்குப் பெரிய சவாலாக உள்ளது. சரியான அறிவி யல் அடிப்படையிலான தகவல்களை முன்கூட்டியே வழங்குவதற்காக Dr.GEM உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நம் பிக்கையையும் சிகிச்சை பற்றிய புரிதலையும் மேம்படுத்தி, சிகிச்சை குறித்து தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்“ என்றார். மேலும், ஜெம் குழுமத்தின் தலைவர் சி.பழனிவேல் கூறுகையில், “எதிர்கால புற்று நோய் பராமரிப்பின் அவசியமான பகுதியாக இருக்கும். நம்பகமான தகவல்களுடன் மருத்துவ சிகிச்சையை நோயாளி கள் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முழு மையான, கனிவுடன் கூடிய புற்றுநோயியல் சேவையின் உறுதி மொழி யாகும்“ என்றார்.

இந்தநிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.ஏ.சிவதாணு பிள்ளை (இஸ்ரோ விஞ்ஞானி), சரவணசுந்தர் (மேற்கு மண்டலக்காவல் துறை தலைவர்) ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img