fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் எத்தியோப்பிய தொழில்துறை குழு ஆய்வு தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் எத்தியோப்பிய தொழில்துறை குழு ஆய்வு தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்

கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியின் மேம்பட்ட ஜவுளி ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை ஆராய்வதற்காக எத்தியோப்பிய தொழில் துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் வருகை தந்தனர். டெக்ஸ்காம்ஸ் டெக்ஸ்டைல் சொல்யூஷன்ஸால் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரியின் இயக்குனர் முனைவர் பி.அல்லி ராணி குழுவினரை வரவேற்றார். பின்னர் நிறுவனத்தின் நூற்பு, நெசவு தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சிகள், ஜவுளி இரசாயன மற்றும் சோதனை ஆய்வகங்கள், மற்றும் சானிட்டரி நாப்கின் உற்பத்திப் பிரிவுகளை குழுவினர் பார்வையிட்டனர். மேலும் பாரம்பரிய தோலுக்கு நிலையான மாற்றான சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியின் புதுமையான ‘அஹிம்சா லெதர்’ரைப் பற்றி எத்தியோப்பிய ஆராய்ச்சி குழுவினருக்கு விளக்கப்பட்டது. இந்த வருகை அறிவு பரிமாற்றம் மட்டுமின்றி இந்தியாவிற்கும் எத்தியோப்பி யாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான அடித்த ளம் அமைய வழிவகுத்தது.

படிக்க வேண்டும்

spot_img