fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே கன மழையால் 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மழை நீரில் மூழ்கி...

மேட்டுப்பாளையம் அருகே கன மழையால் 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலப் பட்டி, வேடர்காலனி, ஊமப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிர தானமாக செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த கிராமங்களில் பெய்த கன மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங் கிய நிலையில் பாலப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்களில் தண் ணீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக பாலப்பட்டி கிராமத்தில் சுப்பையன் என்ற விவசாயி தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை சாகுபடி செய்தி ருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த வாழை மரங்கள் முழுவதும் தண் ணீரில் மூழ்கி சேதமாகின தண்ணீர் படிப்படியாக வடிந்து விடும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மழை நின்று ஒரு வாரம் ஆகியும் இதுவரை தண்ணீர் வடியாததால் 5000ஆயிரம் வாழை மரங்களும் அழுகத்துவங்கியுள்ளது.

இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரி வித்துள்ளார்.
மேலும் குடியிருந்த வீட் டினையும் சூழ்ந்த மழை நீரால் அந்த விவசாயி அங்கு இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசா யிகள் வலியுறுத்தியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img