Homeபிற செய்திகள்பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்ற ஈரோடு மாணவர்கள்

பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்ற ஈரோடு மாணவர்கள்

கேரள மாநிலம் சாலக்குடி முனிசிபல் விளையாட்டு ஸ்டேடியத்தில், நடைபெற்ற தென்னிந்திய அளவிலான விuணீஹ்tலீணீவீ பாக்ஸிங் போட்டி தொடர்களில் தமிழ்நாடு அணி சார்பில் ஈரோட்டில் இருந்து தி ஆக்ஷன் ஜோன் பாக்ஸிங் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களான நலன்ராஜ்(13), நிகல்யன் ராஜ், வேதா (11) -ஆகியோர் தங்கப்பதக்கத்தையும் வைபவ் தமிழினியன் (9) பிரணவ் தமிழினியன் (9) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென் றனர். 5 மாணவர்கள் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று ஈரோட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்கள். மேலும் மாணவி வேதா, தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இறுதி போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதால் Best fighter – Future of the Event என்ற சிறப்பு பரிசும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை தி ஆக்ஷன் ஜோன் பாக்ஸிங் பயிற்சி மையத்தின் பயிற் சியாளர்கள் மஹேந்திர குமார் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img